அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக தகுதி கமலா ஹாரிஸூக்கு இல்லையெனவும், அந்த தகுதிகள் இவாங்காவிடம் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 80 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.
மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இவர்களின் கூட்டணியை அமெரிக்க அதிபர் டிரம்ப், தொடர்ந்து விமர்சித்து கொண்டே வருகிறார்.
அந்தவகையில், குடியரசு கட்சியின் மாநாட்டில் பேசிய அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் முதல் பெண் அதிபரை நான் பார்க்க விரும்புகிறேன் என தெரிவித்த அவர், கமலா ஹாரிஸ் வருவதைப் பார்க்க நான் விரும்பவில்லை எனக் கூறி, கமலா ஹாரிஸூக்கு அந்த தகுதி இல்லை என விமர்சித்தார். மேலும் பேசிய அவர், அந்த தகுதிகள் இவாங்காவிடம் இருப்பதாகவும், இவான்கா அதிபராக வேண்டும் என மக்கள் பலரும் விரும்புவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…