உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் கமலா ஹாரிஸ் 3-வது இடம்!
ஃபோர்ப்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.
வருடம் தோறும் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் சார்பில் உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வெளியிடப்பட்டு உள்ள 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த அங்கேலா மேர்க்கல் முதல் இடத்திலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் ஆகிய கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.
தற்பொழுது அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸ் அவர் முதல் முறையாக உலகின் மிகச்சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதுடன், இந்த பட்டியலில் 3-வது இடத்தையும் பெற்றுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் குறிப்பிட்ட காலத்தில் பிரபலம் அடைந்த பெண்களில் ஒருவரான இவர், தற்போது உலகின் மிக சிறந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மேலும் அவருக்குப் பெருமை சேர்த்துள்ளது.