கமல் ஹாசனிடம் சாண்டி ஆட்டோகிராப் ஒன்றை வாங்கி அதனை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சாண்டி மாஸ்டர். அதனை தொடர்ந்து கமல் ஹாசன் தொகுதி வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-யில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அடுத்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குட்டி பட்டாஸ், அஸ்க் மாரோ ஆகிய ஆல்பம் பாடலுக்கு நடனம் அமைத்திருந்தார். தற்போது இவர் கதாநாயகனாக 3:33 என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தற்போது சில திரைப்படங்களிலு, ஆல்பம் பாடலுக்கும் நடனம் அமைத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பிக் பாஸ் சீசன் 5-க்கான ப்ரோமோ வீடியோவை இவர் தான் இயக்கியிருந்தார்.
அந்த ப்ரோமோ வீடியோவை மிகவும் அழகாக கொடுத்திருந்தார். ரசிகர்களுக்கு மத்தியில் இது நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அந்த ப்ரோமோ வீடியோவின் படப்பிடிப்பு போது சாண்டி மாஸ்டர் கமல் ஹாசனிடம் ஆட்டோகிராப் ஒன்றை வாங்கி அதனை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அதில் ” அன்பு தம்பி சாண்டிக்கு…அன்புடன் கமல்ஹாசன் 2021 அன்றும் இன்றும் என்றும் உலகநாயகன்..அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த ஒரு பையனுக்கு பேச முடியாத தருணம்” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…
டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…