ரிலீசுக்கு முன்பே 100 கோடியை தட்டி தூக்கிய கமல்.! இன்னும் கெத்து குறையல .!

விக்ரம் படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வெளியீட்டு உரிமைகளை 110 கோடிக்கு மேல் வாங்கியிருப்பதாக தகவல்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள்.
படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் மிகவும் பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் விக்ரம் படத்தின் ஓடிடி மற்றும் சேட்டிலைட் வெளியீட்டு உரிமைகளை 110 கோடிக்கு மேல் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் இந்த திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், மைனா நந்தினி, வி.ஜே.மகேஸ்வரி, ஷிவானி நாராயணன், சந்தானபாரதி மற்றும் நரேன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025
பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,
April 24, 2025