ரஜினிக்கு ஆதரவாக தயாரிப்பாளரிடம் கடிந்து கொண்ட உலகநாயகன்! விளக்கம் தந்த படக்குழு!

Default Image

ஜெயம் ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15இல் வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி.  இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதில் படத்தில் ரசிகர்களை கவரும் படி பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த ட்ரெய்லரின் கடைசி காட்சியில் ஜெயம் ரவி கோமாவில் இருந்து 16 ஆண்டுகள் கழித்து, எழுந்திருக்கையில் ரஜினி அரசியல் வருகையை [பற்றி அறிவிப்பர். உடனே ஜெயம் ரவி, யாரை ஏமாற்ற பாக்குறீங்க இது 1996 என கூறி கலாய்த்து இருப்பார்.

இந்த காட்சி சினிமா வட்டாரத்தில் விவாத பொருளாக மாறும் அளவிற்கு சர்ச்சைக்குள்ளானது. இதுகுறித்து உலகநாயகன் கமல்ஹாசன், தயாரிப்பாளர் ஐசரி கணேசனுக்கு நேரடியாக போன் செய்து, வருத்தம் தெரிவித்துள்ளார். இதனை ஒரு விடியோவாக பதிவு செய்து தயாரிப்பளரும் கோமாளி பட இயக்குனரும் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்து கொண்டு இப்படத்தில் சர்ச்சைக்குள்ளான காட்சியை நீக்கிவிட்டு. அதற்க்கு பதிலாக ரசிகர்கள் ரசிக்கும் படியான நல்ல காட்சியை வைப்பதாக இயக்குனரும் தயாரிப்பாளரும் வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்