கமல் தான் என் ஹீரோ.! ரஜினி என் பட வில்லன்.! பிரபல பிரமாண்ட இயக்குனர் அதிரடி.!
இயக்குனர் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து ஆர்ஆர்ஆர் என்ற பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கிறார்கள்.
அலியா பாட், அஜய்தேவ் கான், ஸ்ரேயா சரண், மேலும் சில பல ஹாலிவுட் பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். இந்த திரைப்படம் வரும், அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படத்திற்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை பார்க்க அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜமௌலியிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் குறிப்பாக ஆர்ஆர்ஆர் படத்தை போல் தமிழில் எந்த நடிகர்களை வைத்து இயக்குவீர்கள் என்று கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த ராஜமௌலி ” கமல் சார் மற்றும் ரஜினி சார் கமல் சார் தான் ஹீரோ ரஜினி சார் வில்லன் அதுவும் என் கனவு..எப்போதும் அதைப் பத்தியும் யோசிப்பேன்” என சிரித்து கொண்டே கூறியுள்ளார்.
ரஜினி மற்றும் கமல்ஹாசன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் இருவரும் இணைந்து படம் நடித்தால் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துவிடும் என்பதில் சந்தேகமே இல்லை.