வேட்டையாடு விளையாடுவை தொடர்ந்து மீண்டும் போலீஸாக மிரட்ட வருகிறார் கமல்.!!

Default Image

விக்ரம் படத்தில் நடிகர் கமல் ஹாசன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தை கமல    ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். மேலும் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் பணியாற்றவுள்ளார். இந்த படத்திற்கான டைட்டில் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியானது.

அதனை தொடர்ந்து படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வரவில்லை . படத்திற்கான படப்பிடிப்பு சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு தொடங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கடந்த 6 ஆம் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதற்கு பிறகு விக்ரம் படத்தின் படப்பிடிப்பு 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இதனை தொடர்ந்து கிடைத்த தகவல், இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். வேட்டையாடு விளையாடு படத்தை தொடர்ந்து மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் கமல் நடிப்பதால் மிகவும் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்