தொண்டர்கள் நேர்மையுடன் மக்களுக்கு செயலாற்ற வேண்டும் !
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன் தொண்டர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் அவரது கட்சியில் இணைந்தனர். அவர்களை உற்சாகமாக வரவேற்ற கமல்ஹாசன், தொண்டர்கள் நேர்மையுடன் மக்களுக்கு செயலாற்ற வேண்டும் என்றும், நேர்மைதான் அடையாளமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.