விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் கண் பார்வையற்றவராக நடித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் “விக்ரம்”. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் பஹத்பாசில் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் 10- ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில், நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் கண் பார்வையற்றவராக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் வெளியிடப்பட்ட டைட்டில் டீசரில் விக்ரம் குக்கர் விசில் சத்தம் கேட்டவுடன் கண்ணை திறப்பார். இதனால் விக்ரம் படத்தில் கமல் பார்வையற்றவராக நடித்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கு முன்பு கமல்ஹாசன் 1981-ஆம் ஆண்டு வெளியான ராஜ பார்வை படத்தில் கண் பார்வையற்றவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைபடத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…