பிரதமர் மோடி டிவி வாயிலாக மக்களிடம் உரையாற்றுகையில் இந்தியாவில் 4ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஆனால் அந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும், இந்தியா மற்ற நாடுகளின் உதவியின்றி தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் என்றும் கூறியிருந்தார். இந்த 20லட்சம் கோடி சிறப்பு திட்டங்களின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவி த்திருந்தார். இந்த நிலையில் 20லட்சம் கோடி திட்டங்களை கடந்த ஐந்து நாட்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார்.
இதனை குறித்து பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை டுவிட்டரில் பதி விட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதை கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரை பணயம் வைத்து பணம் பறிக்கிறது. அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு என்ற பதிவை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவிற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருவதோடு வைரலாகியும் வருகிறது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…