அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு – கமல்ஹாசன்.!

Default Image

பிரதமர் மோடி  டிவி வாயிலாக மக்களிடம் உரையாற்றுகையில் இந்தியாவில் 4ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஆனால் அந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும், இந்தியா மற்ற நாடுகளின் உதவியின்றி தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் என்றும் கூறியிருந்தார். இந்த 20லட்சம் கோடி சிறப்பு திட்டங்களின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவி த்திருந்தார். இந்த நிலையில் 20லட்சம் கோடி திட்டங்களை கடந்த ஐந்து நாட்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். 

இதனை குறித்து பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை டுவிட்டரில் பதி விட்டுள்ளார்.  அதில் அவர் கூறியிருப்பதாவது, 20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதை கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரை பணயம் வைத்து பணம் பறிக்கிறது. அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு என்ற பதிவை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவிற்கு  சமூக வலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்து வருவதோடு வைரலாகியும் வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்