பிரதமரின் திட்டம் நடுத்தர, அடித்தட்டு மக்களுக்கு பலனளிக்குமா.? கமல்ஹாசன் டுவிட்.!

Default Image

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி நேற்றைய தினம் டிவி வாயிலாக மக்களிடம் உரையாற்றுகையில் இந்தியாவில் 4ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், ஆனால் அந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் அறிவித்திருந்தார். மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும், இந்த திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என்றும், இந்தியா மற்ற நாடுகளின் உதவியின்றி தன்னம்பிக்கை கொள்ள வைக்கும் என்றும் கூறியிருந்தார். இந்த 20லட்சம் கோடி சிறப்பு திட்டங்களின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார். 

இதனை குறித்து பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், நெட்டிசன்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, உணவின்றி அழும் குழந்தைக்கும், பணமின்றி தவிக்கும் ஏழைக்கும், இப்போதேனும் அறிவித்திருக்கும் பிரதமரின் திட்டத்தை வரவேற்கிறோம். அதே நேரம் நடுத்தர, அடித்தட்டு ஏழை மக்களுக்கு இத்திட்டம் பலனளிக்குமா? காலத்தே கிடைக்குமா என நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாடும் கவனித்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். இவரின் இந்த டுவீட்டுக்கு பலர் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)
Donald Trump
Tamilnadu CM MK Stalin
US Election 2024 trump win
america election 2025Donald Trump