வாழ்த்துக்களை கைகூப்பி ஏற்றுக்கொண்ட கமலஹாசன்!
ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களின் கைகூப்பி ஏற்றுக் கொண்ட கமலஹாசன்.
பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன், இன்று தனது 66-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, அவரது வீட்டின் முன்பாக காலையிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரண்டிருந்தனர்.
இதனையடுத்து, கமலஹாசன் திறந்த வேனில் நின்றபடி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அப்போது திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து முழக்கமிட்டனர். அவர்களின் வாழ்த்துக்களை, கமல்ஹாசன் கைகூப்பி ஏற்றுக் கொண்டார். மேலும், இவருக்கு சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.