கொரோனாவால் பாதிக்கப்பட்ட FEFSI ஊழியர்களுக்கு கமல் 10 லட்சம் நிதி!
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு நடவடிக்கையாக மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகில் இந்த தடை உத்தரவால் பல நிறுவனங்கள் தங்களது தொழில்களை முடங்கிக் கொண்டது.
இதனால் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அனைவரும் பணம் இன்றி உணவின்றி மிகவும் நெருக்கமான நிலையில் காணப்படுகின்றனர். இந்நிலையில் பிரபல நிறுவனம் ஆகிய FEFSI நிறுவனம் பல ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து வந்தது. ஆனால் இந்த 144 தடை உத்தரவால் இந்த நிறுவனத்தின் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அனைவருக்கும் பல நடிகர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர். எடுத்துக்காட்டாக ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன்-சூரியா, கார்த்திக் மற்றும் ஹரிஷிகல்யாண் ஆகிய பலர் இதற்கான உதவிகளை செய்து வந்த நிலையில், தற்போது உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் பெப்சி நிறுவனத்தின் ஊழியர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி அளித்து உதவியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ரமேஷ் பாலா பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
. @ikamalhaasan has donated ₹ 10 Lakhs to #FEFSI employees who are facing a crisis due to the #CoronaVirus outbreak
— Ramesh Bala (@rameshlaus) March 25, 2020