பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை கமல் தொகுக்கவில்லையா ! வதந்திக்கு முற்று புள்ளி வைத்த பிரபல தொலைக்காட்சி !
கமல் ஹாசன் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.மேலும் இவர் இந்தியன் 2 படத்திலும் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.
ஏற்கனவே இவர் மூன்று சீசன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் இவர் அடுத்ததாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை ஒளிபரப்ப மாட்டார் என்றும் அந்த நிகழ்ச்சியை சிம்பு ,மாதவன் ,சூர்யா என வேறு ஒரு முன்னணி நடிகர் தொகுத்து வழங்குவார் என்று ஒரு செய்தி தீயாய் பரவியது.
இது குறித்து தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி அடுத்த சீசனையும் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்குவார்என்று கூறியுள்ளது.