நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் நடிப்பில் வெளியான களத்தில் சந்திப்போம் திரைப்படம் மூன்று நாட்களில் 2.6 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி மற்றும் ஜீவா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் களத்தில் சந்திப்போம். இந்த படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடிகை மஜிமா மோகனும் அருள் நீதிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி தனது சூப்பர் குட்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுடன் வெளியாகி தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தையும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஆம். வெளியான 3 நாட்கள் கடந்த நிலையில், இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 2.6 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. மேலும் வருகின்ற நாட்களில் நன்றாக ஓடி படம் வசூல் தரும் என்று தயாரிப்பாளர்கள் எதிர்பார்த்து காத்துள்ளார்கள். படம் வெற்றியடைய இன்னும் 7 கோடி வசூல் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…