தமிழ் சினிமாவை ஒதுக்கி வைத்துவிட்டு நிச்சயத்தை முடித்த கலகலப்பு-2 ஹீரோயின்.!

Default Image

திரையுலகில் பிரபல நடிகர் நடிகைகள் காதலிப்பதும், திருமணம் செய்வதும் புதிதான ஒரு விஷயம் இல்லை. ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று அதாவது வியாழன் (மார்ச் 24) அன்று நடிகை நிக்கிக்கும் நடிகர் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளார்கள். சென்னையில் உள்ள நிக்கி கல்ராணி வசிக்கும் பில்டிங்கில் வைத்து இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாம்.

தமிழ் சினிமாவில் உள்ள யாரையும் அழைக்காமல் தெலுங்கு சினிமாவில் உள்ள நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து கோலாகலமாக ரகசிய முறையில் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு ரசிகர்கள் தங்களத்தி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆதி மிருகம் திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுமானர். அந்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், யாரையும் அழைக்காமல் நிச்சியத்தார்த்தம் நடத்தியது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், நிக்கி கல்ராணியின் அடுத்த தமிழ் நகைச்சுவை திரைப்படமான ‘இடியட்’ வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகிறது. ராம் பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் மிர்ச்சி சிவா, ஊர்வசி, அக்ஷரா கவுடா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, சிங்கமுத்து, ரவிமரியா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk