அனைத்து தென்னிந்திய நடிகைகளையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த காஜல்.! குஷியில் ரசிகர்கள்.!

Default Image

காஜல் அகர்வாலின் பிறந்தநாளுக்காக உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் அனைத்து தென்னிந்திய நடிகைகளின் ரெக்கார்டையும் முறியடித்து முதலிடத்தில் உள்ளது.

காஜல் அகர்வால், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இந்த தமிழில் லெக்ஷ்மி கல்யாணம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பின் பழனி, பொம்மலாட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோகளுடன் நடித்தார். தற்போது கமலின் இந்தியன் 2, மும்பை சகா, பாரிஸ் பாரிஸ், துல்கரின் ஏய் சினாமிகா, சிரஞ்சீவியின் ஆச்சார்யா படங்களில் நடித்து வருகிறார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் காஜலுக்காக ரசிகர்கள் #HappyBirthdayKajal என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதன் மூலம் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது இந்த ஹேஷ்டேக் 401K ட்வீட்களை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது. இதன் மூலம் காஜல் அகர்வால் அனைத்து தென்னிந்திய நடிகைகளையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆம் தென்னிந்திய நடிகைகளான சமந்தா பிறந்தநாளில் 254K ட்வீட்களையும், அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளில் 156K ட்வீட்களையும், கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளில் 91.5K ட்வீட்களையும், மற்றும் , ரஷ்மிகாவின் பிறந்தநாளில் 55K ட்வீட்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது காஜலின் இந்த வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்