4 ஹீரோயின்களை கொண்டு உருவாகும் திகில் படத்தில் இணைந்த காஜல் அகர்வால்.!

டீக்கே இயக்கத்தில் உருவாகும் திகில் படத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகவும் ,இந்த படத்தில் 4 ஹீரோயின்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஏய் சினாமிகா மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் “லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப்தொடரிலும் நடித்து வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபருடன் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.கணவருடன் இணைந்துள்ள ஹனிமூன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதும் ,அது வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் காஜல் அகர்வால் மற்றும் கௌதம் ஆகியோருடன் இணைந்துள்ள புகைப்படம் ஒன்றை இயக்குனர் டீக்கே வெளியிட்டிருந்தார் .அது சென்னையில் டெஸ்ட் ஷூட்டிங்கிற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தற்போது தெரிய வந்துள்ளது .அதாவது டீக்கேவின் இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது .திகில் படமாக உருவாகும் இந்த படம் 4 ஹீரோயின்களை வைத்து படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025