திகில் கதையில் பேயாக மிரட்ட வருகிறார் காஜல் அகர்வால்..!!
நடிகை காஜல் அகர்வால் அடுத்ததாக கோஷ்டி என்ற திகில் கதை கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.
நடிகை காஜல் அகர்வால் தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் கோஷ்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஜல் அகர்வாலுடன் மயில்சாமி, சத்யன், கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
திகில் கலந்த திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் பேயாக மட்டும் நடிக்காமல் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால் பேயாக நடித்து வருவதால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்றே கூறலாம், விரைவில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் தற்போது தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.