ஐடி துறையில் நடக்கும் ஊழல் குறித்த கதையில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும், படத்தின் டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் , தெலுங்கு,இந்தி என அனைத்து மொழிகளிலும் பல படங்களை நடித்து பிரபலமாக திகழ்பவர் காஜல் அகர்வால்.தற்போது கமல்ஹாசன் அவர்களுடன் இணைந்து இந்தியன்-2, சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா ,நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஏய் சினாமிகா ,கோஷ்டி,பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் இவருக்கு கௌதம் கிச்லு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதும்,அவர்களது ஹனிமூன் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதும் ,அது வைரலானதும் குறிப்பிடத்தக்கது.திருமணத்திற்கு பின் பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவரது புது பட டைட்டில் ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு தமிழில் ‘அனு அண்ட் அர்ஜூன்’ என்றும் , தெலுங்கில் ‘மொசகாலு’ என்றும் டைட்டில் வைத்துள்ளனர் .ஜெப்ரி ஜி சின் இயக்கும் இத்திரைப்படத்தில் காஜல் அகர்வாலுடன் தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு மற்றும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடிக்கவுள்ளனர் . உலகின் மிக பெரிய ஐடி துறையில் நடந்த ஊழல் குறித்து கூறும் இந்த திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கவுள்ளார் . விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…