தீபாவளிக்கு களமிறங்கும் கைதி! தளபதியுடன் மோத தயாரான விஜய் சேதுபதி மற்றும் கார்த்தி!
இந்த வருட தீபாவளிக்கு ஏற்கனவே தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கி வரும் பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது என பட அறிவிப்பு வெளியிடும் போதே அறிவித்துவிட்டு அதற்கான வேளைகளில் தீவிரமாக இறங்கினர். சொன்னனபடி தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.
அடுத்ததாக, மக்கள் செலவின் விஜய் சேதுபதி நடிப்பில், விஜய் சந்தர் இயக்கி வரும் திரைப்படம் சங்கத்தமிழன். இந்த படமும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்து டீசரையும் வெளியிட்டு இருந்தது.
தற்போது இந்தவருட தீபாவளி ரேஸில் நடிகர் கார்த்தி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கைதி திரைப்படமும் களமிறங்கியுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது.
கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் தளபதி விஜயின் அடுத்த படத்தை உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.