பாலிவுட் முன்னணி ஹீரோவை இயக்க தயராகிறாரா லோகேஷ் கனகராஜ்?!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி ஆகிய படங்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றன. இதில் கைதி பட ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும்போதே தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பை அவர் பெற்றார்.
தற்போது தளபதி 64 பட ஷூட்டிங்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிஸியாகியுள்ளார். இவர் இயக்கத்தில் இது மூன்றாவது படமாகும்/
இவர் இயக்கிய கைதி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நாளில் ரிலீசானது. இப்பட ஹிந்தி ரீமேக்கிற்கு அங்கு கடும் போட்டி நிலவுகிறதாம். இப்படத்தை வாங்க ஹிந்தி முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் வாங்க உள்ளாராம். இப்படத்தில் அவர்தான் நடிக்க உள்ளார் என தகவலும் வெளியானது.
தற்போது நடிகர் அஜய் தேவ்கனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சந்தித்து படம் குறித்து பேசி வந்துள்ளார். இதனால் ஒருவேளை பாலிவுட் கைதி ரீமேக்கை லோகேஷ் இயக்க அதிக வாய்ப்புள்ளது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.