சாலை விபத்தில் சிக்கிய ‘கச்சா பாதம்’ பாடகர் மார்பில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்டுள்ளார்.
கச்சா பாதம் பாடலைப் பாடிய பாடகர் பூபன் பாத்யாகர் நேற்று இரவு விபத்தில் சிக்கினார். அவர் மேற்கு வங்க மாநிலம் பிர்பூமில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடகர் பூபன் செகண்ட் ஹேண்ட் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததாகவும், அப்போது விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தின் போது அவரின் உடல் மற்றும் மார்பு உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள குரல்ஜூரி கிராமத்தில் வசிப்பவர் பூபன் பத்யாகர். இவருக்கு மனைவி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பூபன் நிலக்கடலை விற்று பிழைப்பு நடத்தி வந்தார். கிராமப்புற வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ‘கச்சா பாதாம்’ பாடலை பாடினார்.
இந்த பாடலை யாரோ ஒருவர் தனது மொபைலில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து சில நாட்களில் வைரலாக பரவி, பூபன் ஒரே இரவில் உலக அளவில் பிரபலமானார். பின்னர், ஒரு இசை நிறுவனம் அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி அவருடன் அந்த ‘கச்சா பாதாம்’ பாடலை வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோ பட்டி தொட்டி முழுவதும் பரவி பூபன் மிகவும் பிரபலமானார்.
இதைத்தொடர்ந்து, தற்போது அவருக்கு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்படுகிறார். அங்கு ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழு…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி மொழி திணிப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை…
சென்னை : மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை தொகுதியில் மாற்றம் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. அவ்வாறு மேற்கொள்ளும்போது…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…