இப்படத்தில் நான் ஹீரோ இல்லை! காப்பான் செய்தியாளர் சந்திப்பில் சூர்யா சுவாரஸ்ய தகவல்!
சூர்யா நடிப்பில் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். ஆர்யா, மோகன்லால், சயீஷா, சமுத்திரகனி என பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய சூர்யா, இப்படத்தில் தான் ஹீரோ இல்லை, கதையை நகர்த்தி செல்லும் ஒரு கதாபத்திரம் மட்டுமே. கதை கதாபாத்திரங்களின் கோணத்தில் இருந்து வித்தியாசமாக பேசப்பட்டு இருக்கும். என கூறினார்.
இயக்குனர் கே.வி.ஆனந்த் பேசுகையில், இப்படம் வித்தியாசமான படம் இல்லை. நாம் தினமும் நாளிதழில் படிக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும். முக்கியமாக காஷ்மீர் மற்றும் அதன் எல்லையில் உள்ள பிரச்சினைகளை பற்றியம் படம் பேசி இருக்கும். என குறிப்பிட்டார்.