சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆர்யா, மோகன்லால், சயீஷா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் முதலில் ஆகஸ்ட் 30இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் சாஹோ திரைப்படம் திடீரென ஆகஸ்ட் 15இல் இருந்து 30க்கு தள்ளிப்போனது. இதனால், காப்பான் படக்குழு ரிலீஸ் பற்றி மீண்டும் யோசிக்க ஆரம்பித்தது.
காரணம், சூர்யாவிற்கு தமிழை போலவே தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது. இவரது படங்களுக்கு தெலுங்கிலும், மலையாளத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதே நேரத்தில் பிரமாண்ட படமான சாஹோ வருவதால் தமிழ்நாட்டில் தியேட்டர் அதிகமாக கிடைத்தாலும் மற்ற வெளிமாநிலம், வெளிநாடுகளில் சாஹோ படத்திற்குத்தான் வரவேற்பு இருக்கும். எனவே படத்தை இருபது நாள் கழித்து செப்டம்பர் 20இல் படக்குழு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…