சூர்யாவின் காப்பான் இத்தனை நாள் தள்ளிபோனதற்கு இதுதான் உண்மையான காரணமாம்!

Default Image

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் காப்பான். அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆர்யா, மோகன்லால், சயீஷா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த படம் முதலில் ஆகஸ்ட் 30இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் சாஹோ திரைப்படம் திடீரென ஆகஸ்ட் 15இல் இருந்து 30க்கு தள்ளிப்போனது. இதனால், காப்பான் படக்குழு ரிலீஸ் பற்றி மீண்டும் யோசிக்க ஆரம்பித்தது.