காலில் உள்ள பித்த வெடிப்பு நீங்க….!!!
பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் இந்த பித்தவெடிப்பினால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இவர்கள் அன்றாட வாழ்வில் தங்களது வேலைகளை செய்வதில் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்த பித்தவெடிப்பினால் இவர்கள் தாங்கள் இஷ்டப்பட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இந்த நிலையில் இருப்போருக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமையும். பித்தவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் இது இரண்டையும் சம அளவில் எடுத்து அதனுள் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து பசை போல குழைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் பித்த வெடிப்பு உடனே நீங்கும்.