மறைந்தார் க அன்பழகன்…இறுதிசடங்கு இன்று…மாலை 4.45..!

தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பழம்பெரும் அரசியல் தலைவராக வலம்வந்த பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.அவருடைய உடல் இன்று மாலை 4.45 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் வயது மூப்புக் காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது இதனால் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிறப்பு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை மேலும் அவருக்கு செயற்கை சுவாசமானது பொருத்தப்பட்டது.
ஆனால் வயது மூப்புக்காரணமாக மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வேளாண் பட்ஜெட் 2025 : உழவரைத் தேடி புதிய தொழில்நுட்பங்கள்..,
March 15, 2025
முதல் பரிசு ரூ.1.5 லட்சம்…நவீன கருவிகளை கண்டுபிடிப்பவர்களுக்கு பட்ஜெட்டில் வந்த குட் நியூஸ்!
March 15, 2025
தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!
March 15, 2025
TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!
March 15, 2025