கே.ஜி.எஃப்-2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை இன்று மாலை 6.32 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.பிரமாண்ட வெற்றியை பெற்ற இந்த திரைப்படம் பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியை கண்டது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.
ராக்கி என்ற கதாபாத்திரத்தில் யாஷ் அவர்களும் ,அதீரா என்ற கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களும் நடிக்கின்றனர்.மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருந்த இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடை செய்யப்பட்டு ரிலீஸ் தள்ளி போனது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் தான் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தி உள்ளிட்ட 4 தென்னிந்திய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அதாவது கே.ஜி.எஃப் படத்தினை ரிலீஸ் தேதியை குறித்த அப்டேட்டை இன்று மாலை 6.32 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது ரசிகர்களைடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…