கே. ஜி. எஃப் 2 படத்தின் டீசர் அல்லது புதிய போஸ்ட்ரை சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது.
கடந்த 2018ல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் ‘கே. ஜி. எஃப் சாப்டர் 1’. இந்த படம் உலகம் முழுவதும் சுமார் ரூ. 215 கோடிக்களுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது மட்டுமில்லாமல் டிஜிட்டலில் அதிகம் பேர் பார்த்த படமாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் அங்கேயும் மிகப் பெரும் சாதனையும் படைத்தது. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார்.இந்த ஆண்டு ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தப் படத்தை அக்டோபர் 23ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த படத்தில் யாஷூடன் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் சஞ்சய் தத்தின் லுக் போஸ்ட்ர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தற்போது கொரோனா காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 25நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும், அதில் 2 சண்டை காட்சிகளை படமாக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தவிர்த்து இசை பணிகள் உட்பட அனைத்து இறுதிக்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சஞ்சய் தத்தின் பிறந்தநாளான ஜூலை 29 அன்று கே. ஜி. எஃப் 2 படத்தின் புது போஸ்ட்ர் அல்லது டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரசிகர்களுக்கு சற்று மகிழ்ச்சியான செய்தி தான் என்று கருதப்படுகிறது.
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…
சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…
சென்னை : தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 7)…
சென்னை : அமரன் திரைப்படம் கொடுத்த ஒரே வெற்றி இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை பான் இந்திய அளவுக்கு கொண்டு சென்றது என்றே…
நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…
ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…