“பேட்ட ரவுடி எச்.ராஜாவை கண்டு பதுங்கும் தமிழக அரசு” கே.பாலகிருஷ்ணன் கேள்வி…!!
திருவள்ளூர்,
எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் அதை அடக்கி ஒடுக்கும் அதிமுக அரசின் காவல்துறை கண்டபடி பேசினாலும் எச்.ராஜாவை கண்டால் பதுங்குவது ஏன்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருத்துரிமை பறிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
இன்றைக்கு ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சித்துறையில் நடைபெற்ற ஊழலை செய்தியாக சேகரித்த நிருபருக்கு கொலை மிரட்டல் விடுகிறது இந்த அரசு. உழல் செய்த அமைச்சர்களின் அடியாட்கள் வீட்டிற்கே சென்று, “இப்படியெல்லாம் செய்தி வெளியிட்டால், உயிரோடு இருக்கமாட்டே” என்று எச்சரித்துள்ளனர். ஊழல்நடைபெறவில்லை என்றால் மறுப்பு என்று செய்தியை வெளியிடலாமே. அதை விட்டுவிட்டு நிருபரை மிரட்டலாமா? தமிழக வரலாற்றில் இப்போது இருக்கிற அமைச்சர்கள் மீது வந்திருக்கிற ஊழல் குற்றச்சாட்டுகள் போல இதற்கு முன்னாள் இப்படி அதிகப்படியாக வந்ததில்லை.
முதல்வர் பழனிசாமி மீதே மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெற்றுள்ள ஒப்பந்தப் பணிகள்எல்லாம், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டும் முறைகேடான வழியில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க மக்கள் கடுமையாக உழைக்கவேண்டியுள்ள நிலையில் அமைச்சர்கள் ஊழல் மூலமாக கோடி, கோடியாக கொள்ளையடிக்கின்றனர். இந்த ஊழல்களை விசாரிக்க வேண்டிய லஞ்ச ஒழிப்பு துறையே சிக்கலில் உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி மீதே பாலியல் புகார் வந்துள்ளது.இந்நிலையில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.ஊழல் குறித்த புகார்கள் மீது விசாரணை நியாயமாக நடக்க வாய்ப்பில்லை. இப்படி எங்கும், எதிலும் ஊழல் மலிந்துள்ள அதிமுக அரசை பற்றி பத்திரிக்கைகள் எழுதக் கூடாது, மேடைபோட்டு பேசக் கூடாது என்றால் என்ன நியாயம்? இது ஜனநாயக நாடா சர்வாதிகார நாடா என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அவர்களின் உறவினர்கள் மீதும் ஏராளமானஊழல் புகார்கள் வந்த பிறகும் லஞ்சம் வாங்குவதை அவர்கள் நிறுத்தவில்லை.பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பேட்டை ரவுடி போல பேசிவருகிறார். ஆனால் அவரை கைது செய்யாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர். எச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோருக்கு ஒரு சட்டம், எதிர் கட்சிகளுக்கு ஒரு சட்டமா? ஸ்டெர்லைட்போன்ற கார்பரேட் நிறுவன முதலாளிகளை எதிர்த்தால், “ வாயால் பேசமாட்டோம் துப்பாக்கியால் தான்பேசுவோம்’’ என்று அரசு மிரட்டுகிறது. காவல்துறையையும் நீதிமன்றத்தையும் கொச்சையாக திட்டும் எச்.ராஜாவை கண்டால் அதிமுகஅரசு பதுங்கிக்கொள்கிறது என்று கடுமையாக சாடினார்.
DINASUVADU