அரை கம்பத்தில் கொடி…7நாட்கள் எந்த நிகழ்ச்சியும் கிடையாது-திமுக அறிவிப்பு
தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் பழம்பெரும் அரசியல் தலைவராக வலம்வந்த பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் வயது மூப்புக் காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது இதனால் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிறப்பு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை மேலும் அவருக்கு செயற்கை சுவாசமானது பொருத்தப்பட்டது.
ஆனால் வயது மூப்புக்காரணமாக மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் க அன்பழகனின் உடலுக்கு மு.க ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் மறைவினை அடுத்து திமுக நிகழ்ச்சிகள் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதுடன் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் கட்சிக்கொடி தொடர்ந்து 7 நாட்கள் அரை கம்பத்தில் பறக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலமாக அறிவித்துள்ளார்.