மறைந்த தி.மு.க பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடலுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் வயது மூப்புக் காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது இதனால் அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிறப்பு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல் நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை மேலும் அவருக்கு செயற்கை சுவாசமானது பொருத்தப்பட்டது.
வயது மூப்புக்காரணமாக மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை பயனளிக்க முடியாத நிலையில் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவருடைய உடலுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் பொதுச்செயலாளர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் மேலும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் அவருடைய உடல் தகனம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…