ஜோதிகாவின் அடுத்த படம் இந்த முன்னணி ஹேன்ட்சம் ஹீரோவுடனா.?
ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட ஜோதிகா சில காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் .அதன் பின் மீண்டும் 36 வயதினிலே எனும் படத்தின் மூலம் ரீ என்டரி கொடுத்த இவர் தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி என நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.கடைசியாக இவரது நடிப்பில் பொன்மகள் வந்தாள் எனும் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாகி ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஜோதிகா அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது ஜோதிகா அடுத்ததாக 36 வயதினிலே படத்தினை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அது மட்டுமின்றி இந்த படத்தில் மலையாளம், தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.