#JustNow: இலங்கை வன்முறை – ஐ.நா. கண்டனம்!
இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பவங்களுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் கண்டனம்.
இலங்கையில் நடைபெற்று வரும் வன்முறைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மிச்செல் பச்லெட் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொண்டு வன்முறை சம்பவங்கள் நடைபெறாமல் அமைதியை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த போராட்டத்தில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. இந்த நிலையில் வன்முறைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில், பிரதமர் பதிவில் இருந்து மகிந்த ராஜபக்சே நேற்று ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு கோட்டாபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்திருந்தார். அதுமட்டும் போதாது, ராஜபக்சே குடும்பத்தில் உள்ள அனைவரும் அரசு பதவியில் இருக்கக்கூடாது என கூறி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.