#justnow:ஷாக்…ட்விட்டரில் இனி பயனர்களுக்கு கட்டணமா? – எலான் மஸ்க் திடீர் அறிவிப்பு!

Default Image

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் மிகச் சிறந்த பயனர்களில் ஒருவரான உலக பணக்காரரான எலான் மஸ்க்,கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 9% ட்விட்டர் பங்குகளைக் வாங்கியிருந்தார்.இதனைத்தொடர்ந்து, ட்விட்டரை கைப்பற்றுவதற்கு எலான் மஸ்க் தீவிர முயற்சி எடுத்து வந்த நிலையில், 44 பில்லியன் டாலர்கள்(3.36 லட்சம் கோடி) மதிப்பில் ட்விட்டரை ஏப்ரல் 25 அன்று கைப்பற்றினார்.

இதனையடுத்து,ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதிலிருந்து ட்விட்டர் ஊழியர்கள் தங்கள் வேலை பறிபோகுமோ என்று அச்சத்தில் உள்ளனர்.அதே சமயம்,கடந்த சில வாரங்களில்,ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலின் பணிநீக்கங்கள், ட்விட்டரின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில்,அரசு ஊழியர்கள்,வணிக நிறுவனங்கள் ட்வீட் செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“ட்விட்டர் எப்பொழுதும் சாதாரண பயனர்களுக்கு இலவசமாக இருக்கும், ஆனால் வணிக மற்றும் அரசு பயனர்களுக்கு சிறிய கட்டணம் விதிக்கப்படலாம் “,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்