மீண்டும் ஆசிரியராக உருவெடுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.!
கொரோனா வைரசால் ஊரடங்கு நிலவும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக உலக முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், வீட்டில் இருத்தபடி பாடம் கற்றுக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசால் ஊரடங்கு நிலவும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியராக மாறியுள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் கூடிய பதிவை போட்டுள்ளார். அதில், பெற்றோர்கள் அனைவர்க்கும் வணக்கம் என்றும் உங்கள் குழந்தைகள் வீட்டுப்பாடம் தொடர்பான கேள்விகளில் குழந்தைகள் சிக்கிக்கொண்டால்.? அந்த செய்தியை எனக்கு அனுப்புங்கள், ஏனென்றால் நான் ஒரு ஆசிரியராக உதவ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையயடுத்து இந்த ட்வீட்டுக்கு பதிலளிப்பதன் மூலமோ அல்லது #CanadaHomeworkHelp என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துவதன் மூலமோ கடினமான கேள்வி என்ன என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதனிடையே கனடாவுக்கு பிரதமராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, ஜஸ்டின் ட்ரூடோ ஆசிரியர் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். அந்தவகையில் கனடா பிரதமர் ஒரு ஆசிரியராக உதவ விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார். கனடாவில் கொரோனா தொற்றுக்கு 68,848 பேர் பாதிக்கப்பட்டு, 4,870 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸில் இருந்து 32,096 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hey parents! If your kids are stuck on a homework question, feel free to pass this message along. Because as a teacher, I want to help out. Let me know what the difficult question is by replying to this tweet or using the hashtag #CanadaHomeworkHelp – and I’ll see what I can do. pic.twitter.com/MivkOaE8KM
— Justin Trudeau (@JustinTrudeau) May 10, 2020