தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான 2019- 2022-ம் ஆண்டுக்கான தேர்தல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்யராஜ் தலைமையான சுவாமி சங்கரதாஸ் அணியும் தேர்தலில் போட்டியிட்டனர்.
இதைத்தொடர்ந்து நடிகர் சங்க தேர்தலை நிறுத்திவைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி நடிகர் சங்க விஷாலும் , நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். மேலும் நடிகர் விஷால் , நாசர் மற்றும் கார்த்தி நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை நியமித்தது எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.
பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதால் நடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை எண்ணப்படாமல் சீல் வைக்கப்பட்டு தேர்தல் நடத்திய அதிகாரிகளின் பொறுப்பில் இருந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி கல்யாணசுந்தரம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.
அதில் நடிகர் சங்க தேர்தல் செல்லாது எனவும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து பேசிய ஐசரி கணேஷ், நடிகர் சங்கத் தீர்ப்பின் மூலம் நீதி, நியாயம், தர்மம் வென்றுள்ளது என்றும் மறுதேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…