ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பாலிவுட்டில் வெளியாகி வரவேற்பை பெற்ற ஆர்டிகிள் 15 எனும் படத்தின் ரீமேக்காக தமிழில் உருவாகியுள்ள படம் தான் நெஞ்சுக்கு நீதி. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்திற்கான ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படம் வருகிற மே மாதம் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…