பழங்கால நடிகர்களுக்கே டஃப் கொடுப்பார் போலயே நம்ம மாகாபா!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து நிகழ்ச்சிகளை நடத்துபவர் தான் மா.கா.பா ஆனந்த். நடிகர்களுக்கு இருக்கின்ற அளவு ரசிகர் இவருக்கும் இருக்கிறார்கள் என்றால் அது மறுக்கப்பட முடியாத உண்மை என்றுதான் சொல்லியாகவேண்டும்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இவர், தற்பொழுது பழங்காலத்து நடிகர்கள் போல தனது மீசையை மாற்றிக் கொண்டுள்ளார். பழங்காலத்து உச்ச நட்சத்திரமாக வலம் வந்த சந்திரபாபு போல குச்சி மீசை வைத்து புகைப்படம் எடுத்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,