அட இவ்வளவு நன்மைகளா? இந்த கீரையை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டாலே போதும்!
பசலை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்.
இன்று நாம் நாகரீகம் என்னும் பெயரில், நமது வாய்க்கு ருசியான, மேலை நாட்டு உணவுகளை தான் தேடி செல்கிறோம். ஆனால், இவையெல்லாம், நமது நாவுக்கு ருசியாக இருக்கலாம். ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருப்பதில்லை. நமது முன்னோர்களின் நீண்ட ஆயுளுக்கு காரணம், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்தது தான்.
தற்போது இந்த பதிவில், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பசலை கீரையில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.
மாதவிடாய்
பல பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில், பல வகையான பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இப்படி பிரச்சனைகள் உள்ளவர்கள், வாரம் ஒரு முறை பசலை கீரையை சமைத்து சாப்பிட்டால், இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
இன்று நமது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணாம், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். நாமத்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்பட்டால், நம்மை எந்த நோய்களும் அண்டாது. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள், தினமும் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
சிறுநீரகம்
நமது உடலில் முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகம். இந்த சிறுநீரகத்தின் செயல்பாட்டை சீராக பராமரிக்க, பசலை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.