அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்து கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
கேரளாவின் பாலக்காட்டில் உள்ள சைலண்ட் வேலி தேசிய பூங்காவை சேர்ந்த 15 வயதுடைய கர்ப்பிணி யானையை அங்குள்ள மக்கள் அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்து சாப்பிட கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்டதால் அந்த ஒரு மாத கர்ப்பிணி யானை இறந்த விட்டது. வாயில்லா ஜீவனை கொன்றதற்காக சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கண்டனம் தெரிவித்தோடு, இவ்வாறு ஒரு கொடூர செயலை செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் . இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் இந்த கொடூர செயலுக்கு எதிராக டூவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற மர்மநபர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டும். விலங்குகள் காக்கும் போது தான் மனித குலமும் காக்கப்படும். மேலும் வாய் இல்லாத ஜீவன்களிடம் நாம் அனைவரும் அன்புகாட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். தற்போது இவரது இந்த டுவீட்டுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…