விலங்குகள் காக்கும்போது தான் மனிதகுலமும் காக்கப்படும்.! கர்ப்பிணி யானையை கொன்ற சம்பவம் குறித்து விஜயகாந்த்.!

Default Image

அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்து கர்ப்பிணி யானையை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

கேரளாவின் பாலக்காட்டில் உள்ள சைலண்ட் வேலி தேசிய பூங்காவை சேர்ந்த 15 வயதுடைய கர்ப்பிணி யானையை அங்குள்ள மக்கள் அன்னாசி பழத்தில் வெடிமருந்து வைத்து சாப்பிட கொடுத்துள்ளனர். அதனை சாப்பிட்டதால் அந்த ஒரு மாத கர்ப்பிணி யானை இறந்த விட்டது. வாயில்லா ஜீவனை கொன்றதற்காக சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் கண்டனம் தெரிவித்தோடு, இவ்வாறு ஒரு கொடூர செயலை செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் . இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தற்போது நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் இந்த கொடூர செயலுக்கு எதிராக டூவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கர்ப்பிணி யானையை வெடி வைத்து கொன்ற மர்மநபர்களுக்கு மிகப்பெரிய தண்டனையை வழங்க வேண்டும். விலங்குகள் காக்கும் போது தான் மனித குலமும் காக்கப்படும். மேலு‌ம் வாய் இல்லாத ஜீவன்களிடம் நாம் அனைவரும் அன்புகாட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார். தற்போது இவரது இந்த டுவீட்டுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்