முகத்திலுள்ள தேவையற்ற முடிகளை நீக்க கற்றாழை மட்டும் இருந்தால் போதும்…!
பொதுவாக பெண்கள் பலருக்கும் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று முகத்தில் உள்ள ரோமம் தான். முகத்தை அழகு படுத்துவதற்காக பெண்கள் பணத்தை செலவு செய்து பர்லருக்கு செல்கின்றனர். சிலருக்கு அதனால் பலனும் கிடைக்காமல் போய்விடுகிறது. குறிப்பாக, பல பெண்கள் முகத்தில் உள்ள முடிகளை நீக்குவதற்காக பார்லருக்கு சென்று பணத்தை விரையம் செய்கின்றனர்.
ஆனால் பார்லருக்கு சென்றாலும் முடி நிரந்தரமாக நீங்கப் போவதில்லை. பொதுவாக பெண்களுக்கு மேல் உதடு மற்றும் கன்னங்களில் இருக்க கூடிய முடியை வீட்டிலிருந்தபடியே இயற்கையாக காற்றாழையை பயன்படுத்தி எப்படி நீக்குவது என்பது குறித்து இன்று நாம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையானவை
- கற்றாழை ஜெல்
- தேன்
- சர்க்கரை
செய்முறை
முதலில் காற்றாழையிலிருந்து நன்றாக ஜெல்லை எடுத்து வைத்துக் கொள்ளவும். அதன் பின் ஒரு கடாயில் கற்றாழை ஜெல்லை ஊற்றி நன்கு கிளற வேண்டும். ஜெல் சூடு ஏறியவுடன், 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கட்டி சேராமல் கிளரவும். அதன் பின் இறுதியாக ஒரு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கிளறி இறக்கி விடவும்.
உபயோகிக்கும் முறை
முகம் முழுவதும் இதை தடவாமல், முகத்தில் தேவையற்ற இடங்களில் வளரும் முடிகள் இருக்கும் இடத்தில் மட்டும் இதை மாஸ்க் போல தடவிக் கொள்ளவும். கண்கள், உதடுகள் மற்றும் புருவங்களில் இதை பயன்படுத்த வேண்டாம்.
இந்த மாஸ்க்கை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் காயவிடவும். அதன் பின்பு கழுத்தில் இருந்து இந்த மாஸ்கை மேல்புறமாக அப்படியே முன்னோக்கி இழுக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது முகத்தில் உள்ள முடிகள் அந்த மாஸ்க் உடன் சேர்ந்து வந்துவிடும். இதை வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.