வெனிசுலாவின் தற்காலிக அதிபராக ஜூவான் கெய்டோ தேர்வு…!!
வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபராக ஜூவான் கெய்டோ பிரகடனப் படுத்தப்பட்டுள்ளார்.
வெனிசுலா நாட்டின் அதிபருக்கு பிரகடனபடுத்தப்பட்டுள்ள ஜூவான் கெய்டோ அமெரிக்கா , கனடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த வன்முறையில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டம் அதிகளவில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெனிசுலா நாட்டின் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை தற்காலிக அதிபராக பிரகடனம் படுத்திக்கொண்டுள்ளார். இவரின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.