அமர்நாத் யாத்ரீகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து கண்காணிப்பு தீவிரமாக்கபட்டுளது : லெப்டினென்ட் ஜெனரல் JS சாந்த்
ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் இன்று பாசிங் அவுட் பாரேட் விழா நடைபெற்று வருகிறது. இதில் ஜம்மு-காஷ்மீர் லைட் காலாட்படை ரெஜிமென்ட்டிற்கு 251 பேர் பணி நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய லெப்டினென்ட் ஜெனரல் JS சாந்த், அமர்நாத் யாத்ரீகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருக்க நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாது, நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.