நடிகர் மோகன்லாலுடன் இணையும் ஜாக்கிசான்!
- நடிகர் மோகன்லாலுடன் இணையும் ஜாக்கிசான்
- முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜாக்கிசான் நடிக்க உள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு, சுதந்திர போராட்ட வீரரான ஐயப்பன் பிள்ளை மாதவன் நாயர் வாழ்க்கையை கொண்டு, மலையாளத்தில் படமெடுக்க திட்டமிடப்பட்டது. இப்படத்திற்கு நாயர் ஷான் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளது. இப்படத்தை இயக்குனர் ஆல்பர்ட் ஆண்டனி இயக்கவுள்ளார். இந்த படத்தில்,ஏ.எம்.நாயர் கதாபாத்திரத்தில் நடிகர் மோகன்லால் நடிக்கிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜாக்கிசான் நடிக்க உள்ளார். தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகிறது.