அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் டால்கம் பேபி பவுடருக்கான விற்பனையை நிறுத்தி வைப்பதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறத
உலக முழுவதும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது எனக் கருதப்பட்ட ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. அந்தவகையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உற்பத்தி செய்யும் டால்கம் பேபி பவுடர் புற்றுநோயை உண்டாக்கும் தன்மையுடையது என அமெரிக்காவில் மட்டும் சுமார் 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் வழக்குத் தொடர்ந்து உள்ளனர். இதையடுத்து, இந்நிறுவனத்தின் மீது போடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதும் குறிப்பிடப்படுகிறது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், வாடிக்கையாளர்களுக்கு நிவாரணத் தொகையாக வழங்கவேண்டும் என தீர்ப்பளித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து, தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் டால்கம் பேபி பவுடருக்கான விற்பனையை நிறுத்தி வைப்பதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. டால்கம் பவுடர் என்பது மக்னீசியம் மற்றும் சிலிக்கான் சேர்க்கப்பட்ட ஒரு மென்மையான கனிமம் ஆகும். இந்த நிலையில், குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் இந்த டால்கம் பவுடரில் செயற்கையான கனிமங்கள் சேர்க்கப்படுவதால் தோல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது இரு நாட்டில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…