புற்றுநோய் ஏற்பட காரணமாக இருப்பதாக வழக்கு ! ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.890 கோடி அபராதம்

Default Image

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற நச்சுப்பொருள் இருப்பதால் ,அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பவுடர்களில் மிகவும் பிரபலமானது ஜான்சன் அண்ட் ஜான்சன்.பெரும்பாலானோர் இந்த நிறுவனத்தின் பவுடரையே பயன்படுத்துகின்றனர் .தற்போது எல்லாம் ஒரே பேக்கில் பிறந்த குழந்தைக்கு தேவையான அனைத்தும் இருக்கும் .அதன்படி, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பேபி பவுடர்,பேபி லோஷன், வேர்க்குரு அகற்றும் பவுடரான ஷவர் டு ஷவர் மற்றும் ஷாம்பு ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது .

இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் பவுடரை பயன்படுத்தியதால் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகவும் , கடந்த 50 ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகளான பேபி பவுடர், பேபி லோஷன், ஷவர் டு ஷவர் மற்றும் ஷாம்பை ஆகியவற்றை பயன்படுத்தியதால் , அதிலுள்ள ஆஸ்பெஸ்டாஸ் என்ற நச்சுப்பொருள் தனக்கு மெசோதிலியோமா என்ற புற்றுநோய் ஏற்பட காரணமாக இருந்ததாகவும் கூறி டோன்னா ஓல்சன் என்ற பெண் மன்ஹாட்டன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் .அதன்படி மன்ஹாட்டன் உச்சநீதிமன்றம் அமெரிக்காவில் உள்ள பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 890 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த 2018-ஆம் ஆண்டே ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற இராசயனம் கலந்திருப்பதால் ,அவை புற்றுநோய் ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்